இம்ரான் கானின் முன்னாள் மனைவிக்கு திருமணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கிரிக்கெட் பிரபலமும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி, ஜெமைமா கோல்ட்ஸ்மித்.

இம்ரான் கான், பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.

இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமைமா கோல்ட்ஸ்மித், கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஐரிஷ் அவுஸ்திரேலிய கோடீஸ்வரரான Sir Anthony O’Reilly என்பவரின் மகனான Cameron O’Reilly, (62) என்பவரையே திருமணம் செய்துள்ளார் ஜெமைமா.

இருவருக்கும், வார இறுதியில் திருமணம் நடைபெற்றதாக ஜெமைமாவின் சகோதரரான பென் கோல்ட்ஸ்மித் தெரிவித்துள்ளார்.

விருதுகள் வென்ற திரைப்பட தயாரிப்பாளரான ஜெமைமா, பிரித்தானிய இளவரசி டயானாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap