முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்

2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது.

சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

முதல் சுற்றுத் தேர்தலில், மரீன் லெ பென்னுக்கு 33 முதல் 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

அத்துடன், தீவிர இடதுசாரியினரான ஜான் லூக் மெலன்ஷான் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மேக்ரான் ஆட்சியில் பிரதமராக இருந்த Edouard Philippeம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான போட்டியில்இருக்கிறார்.

மெலன்ஷானைப் பொருத்தவரை, அவர் ஏற்கனவே 2012, 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டும், அவரால் இரண்டாவது சுற்றை எட்டவேமுடியாமல் போய்விட்டது.

அதேபோல, மரீன் லெ பென்னும் 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டும் மேக்ரானிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap