முக ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap