ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!

ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தற்போது 107,677 முதியவர்கள் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். இதில் 88% பேர் பெண்கள் ஆவர்.

கியோட்டோ (Kyoto) நகரத்தைச் சேர்ந்த 114 வயதான கிஷிமோட்டோ ஃபுயோ (Kishimoto Fuyo) மிகவும் வயதான பெண்ணாகவும், குமாமோட்டோவைச் (Kumamoto) சேர்ந்த 112 வயதான காடோ ஹிகாரூ (Kato hikaru) மிகவும் வயதான ஆணாகவும் கருதப்படுகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர் கெனிசிரோ உஎனோ (Kenichiro Ueno), சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையான சமூகப் பாதுகாப்பு அமைப்பைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மீன், காய்கறிகள் மற்றும் அரிசி ஆகியவை அடங்கிய குறைந்த நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பாரம்பரிய உணவு முறை.

முதியவர்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பன இதில் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்க ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.14 ஆகக் குறைந்துள்ளது.

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தற்போது நாட்டின் 30% மக்கள்தொகையாக உள்ளனர். இது 2070 ஆண்டுக்குள் 40%ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2008 இல் 12.8 கோடியாக இருந்த உச்சபட்ச மக்கள் தொகை, 2070 க்குள் 30% குறைந்து 8.7 கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த மக்கள்தொகை வீழ்ச்சியை ஒரு "அமைதியான அவசரநிலை" (quiet emergency) என பிரதமர் சனாயே டாகிச்சி (Sanae Takichi) வர்ணித்துள்ளார்.

1963-ல் முதன்முதலில் இந்த ஆய்வு தொடங்கியபோது 100 வயதைக் கடந்தவர்கள் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1981-ல் 1,000 ஆகவும்இ 1998-ல் 10,000 ஆகவும் உயர்ந்தது.

Bootstrap