ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும்  புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap