ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து தனித்துவமான ஒப்பந்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.

தற்போது, கனடா-அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த சுங்க வரிகளை, கனடா ‘டொலர்-க்கு டொலர்’ என்ற முறையில் எதிர்த்து வருகிறது. இதனால், கனடா தனது பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவைத் தேடுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஏற்கனவே CETA (Comprehensive Economic and Trade Agreement) என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. 2017-இல் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தம், 99 சதவீத சுங்க வரிகளை நீக்கியது. இப்போது, EU-Canada உறவு, “பொது வளமும் பொருளாதார பாதுகாப்பும்” என்ற புதிய நிலைக்கு முன்னேறுகிறது.

உர்சுலா வான் டெர்லெயன், “கனடா மற்றும் ஐரோப்பா உலகைப் பார்க்கும் பார்வை ஒன்றே. AI, காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பாதுகாப்பு, மற்றும் புவியியல் அரசியல் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

Bootstrap