பிரபலத்துக்கு உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்: ஒரு யூரோ இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்

கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது.

அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான கிம் கார்டாஷியன் என்பவர் 2016ஆம் ஆண்டு பாரீஸில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, முகமூடி அணிந்த எட்டு பேர் கிம் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் கிம்மைக் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை அடைத்து அவரிடமிருந்த 6 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்கள்.

அவர்கள் நடந்துகொண்ட விதத்தால் பயந்து நடுங்கிய கிம், தனக்குப் பிள்ளைகள் இருப்பதாக கூறியதுடன், என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், என்னை மட்டும் உயிருடன் விட்டுவிடுங்கள் என கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். என்றாலும், விசாரணைக்கு முன்பே அவர்கள் சிறையில் நீண்ட காலம் செலவிட்டிருந்ததால், வழக்கு முடிந்தும் அவர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், அந்த வழக்கில் கிம்முக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று  இழப்பீடு வழங்கியுள்ளது.

அதாவது, தங்கள் வழக்கில் தங்களுக்கு நீதி கிடைத்ததே போதும் என்று கிம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் வாழ்வில் மிக பயங்கரமான ஒரு சம்பவம் அது என்று குறிப்பிட்டுள்ள கிம், தங்கள் குடும்பத்தின் மீது அது நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளதுடன், வழக்கில் தங்களுக்கு நிதி கிடைக்க உதவிய பிரான்ஸ் அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு யூரோ மட்டும் இழப்பீடு வழங்கினால் போதும் என கிம் கேட்டுக்கொண்டதையடுத்தே, அவருக்கு நீதிமன்றம் ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap