மூவாண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது.

2023ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

3.75 விழுக்காடாக இருந்த வட்டி விகிதம் தற்போது 4 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைக் குறைக்க அது உதவும் என்று கருதப்படுகிறது.

வட்டி விகிதங்களைக் குறைக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதையும் மீறி அவை உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய வங்கித் தலைவர் கெவின் வார்ஷ் (Kevin Warsh) இந்த முடிவு சிரமமான ஒன்று என்றாலும் அவசியமானது என கூறியுள்ளார்.

வட்டி விகிதம் மீண்டும் உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதிக்குள் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று

பெரும்பாலான கொள்கை வகுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், வரிக் கொள்கைகள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி ஆகியவை பொருள்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

அமெரிக்கக் குடும்பங்களும் நிறுவனங்களும் ஏற்கனவே தொடரும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Bootstrap