ஈரான் சென்ற ஜுன் மாதம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட இடைக்கால அமைதி உடன்பாட்டின் விதிகளுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சியிடம் (Abbas Aragchi) அவ்வாறு கூறியுள்ளார்.
ஈரானும் அமெரிக்காவும் அமைதி காத்து, அரசதந்திரப் பேச்சுகளைத் தொடரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க, எல்லாத் தரப்பும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு வாங் யீ வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த திரு அராக்ச்சி, ஈரானின் உரிமைகளை நிலைநாட்டும் தீர்வுகளை வரவேற்பதாகக் கூறினார்.
ஈரானின் அரசுரிமையையும் பிரதேச உரிமையையும் தற்காக்கத் தயாராய் இருப்பதாகவும் அவர் சொன்னார்.