இந்தியா தொடர்ந்து பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம், ரஷ்ய எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிவிதிக்கும் புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தியா அவ்வாறு கூறியுள்ளது.
1.4 பில்லியன் மக்களின் எரிசக்தித் தேவையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கப்போவதாக அது வலியுறுத்தியது.
தனது வர்த்தக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் இந்தியா சொன்னது.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே முக்கியமான உத்திகள் அடிப்படையிலான நெருக்கமான கூட்டுத் திட்டங்கள் இருக்கின்றன.
இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் ரஷ்யா திகழ்கிறது.