இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறும் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள்

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்த இரண்டே நாளில் வேறு பள்ளிக்கு மாறுகின்றனர்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.

பள்ளியின் தரமோ அங்குப் பிள்ளைகள் நடத்தப்பட்ட விதமோ முடிவுக்குக் காரணம் இல்லை என்று குறிப்பிட்டப்பட்டது.

வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம், அந்த வட்டாரத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலை எழுந்துள்ளது.

இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியின் பேச்சாளர் அந்த விவரத்தைத் தந்தார்.

அவர்களின் வீடு எங்குள்ளது, பிள்ளைகள் எந்தப் பள்ளிக்குச் சென்றனர் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இளவரசர் ஹாரியும் மேகனும் 2020ஆம் ஆண்டு அரச குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி அமெரிக்காவுக்குச் சென்றனர்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கடந்த மாதம் பிரிட்டனுக்குத் திரும்பினர்.

Bootstrap