தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இன்று (18) துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்களை அதிகாரிகள் தற்போது சரிபார்த்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.