ட்ரம்பின் மகன்களுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் ஒப்பந்தம்

அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக Powerus தெரிவித்துள்ளது.

அதேவேளை, ட்ரம்பின் மகன்களுக்கு ஒப்பந்தத்தில் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என நிறுவனத் தரப்பு கூறியுள்ளது.

Bootstrap