காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர ஆரம்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் தற்காலிக கற்றல் மையங்கள் மற்றும் மீதமுள்ள பாடசாலைக் கட்டிடங்களிலேயே தங்களது கல்வியைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.