34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார்.

மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதனை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது மகள் மறுப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். இதே கொள்கையை மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.

அவர்களின் இளைய மகள் ஃபீபி கேட்ஸ் (Phoebe Gates), தனது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து Phia என்ற ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த பிளாட்ஃபார்ம், 40,000-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகள் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கண்டுபிடிக்க உதவுகிறது.

மெலிண்டா, பெண்கள் தொழில் முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, கேட்ஸ் குடும்பத்தின் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது.

Bootstrap