ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்காவின் MQ-1 ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து அழித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா MQ-1 ட்ரோன்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கியிருந்தாலும், மிகவும் மேம்பட்ட MQ-9 ரக ட்ரோன்களைப் பெருமளவில் இழந்ததைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக IRGC கூறியது.
இந்த இரண்டு ரக ட்ரோன்களும் IRGC-யின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பால் தீவிரமாக வேட்டையாடப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க விமானப்படை MQ-1 'பிரிடேட்டர்' (Predator) ரக ட்ரோன்களை 2018-ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.