06 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த முதலை பிடிக்கப்பட்டது - இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில்  கடந்த 06 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை  திங்கட்கிழமை (21) வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு  கோதையாற்றில்  கடந்த 06 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருந்து வந்ததுள்ளது.

தொடர்ந்து முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்ததோடு  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஒருநடைக்கல் ஆற்றுப்பாலம் அருகே வனத்துறையினர் விரித்திருந்த வலையில் முதலை சிக்கியுள்ளது. இதனைப்தொடர்ந்து வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Bootstrap