புத்தகம் வாசிப்பவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது.

சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஸ்மார்ட் போனில் அதிக நேரங்களை செலவிடுவதால், வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது.

இதனால் வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க, வாசிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது.

சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியம், இதற்காக 5 ஆண்டு கால தேசிய வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதிபெற ஒரு வாசிப்பு அமர்வு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு அமர்வு மட்டுமே இடம் பெற முடியும்.

தங்களின் வாசிப்பு அமர்வுகளை அரசாங்கத்தின் CrowdTaskSG தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தகுதிபெறும் ஒவ்வொரு அமர்வுக்கும் 20 மெய்நிகர் நாணயங்கள் வழங்கப்படும். 1,000 மெய்நிகர் நாணயங்களைச் சேர்த்தவுடன், அவற்றை ஒரு சிங்கப்பூர் டொலராக மாற்ற முடியும்.

மக்கள் எப்போதாவது செய்யும் ஒரு செயலாக இல்லாமல், வாசிப்பை ஒரு வழக்கமான செயலாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

பேருந்துக்காகக் காத்திருப்பது அல்லது காலையில் காபி அருந்துவது போன்ற அன்றாட தருணங்களில் கூட 15 நிமிடங்களை ஒதுக்கலாம் என அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

Bootstrap