இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 25, 2026 வெள்ளி

பஞ்சாங்கம்

நாள் வெள்ளிக்கிழமை
திதி சதுர்த்தசி இரவு 11.12 வரை பிறகு பௌர்ணமி
நட்சத்திரம் சதயம் பகல் 12.04 வரை பிறகு பூரட்டாதி
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம் பூசம் பகல் 12.04 வரை பிறகு ஆயில்யம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய சூழ்நிலை புரிந்து அதற்கு ஏற்ற வேண்டியது செயல்பட வேண்டிய நாள். சவால்கள் நிறைந்திருக்கும். இருப்பினும் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தில் அல்லது உறவினர்களிடம் தவறான புரிதல் ஏற்படலாம். என்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது எந்த வித பதட்டத்தை குறைக்க உதவும்.இன்று உங்களுக்கான வாய்ப்புகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உன்னுடைய திறனை வெளிப்படுத்தவும், உங்களுக்காக நேரம் ஒதுக்கவும் முயற்சிக்கவும்.

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு அற்புதமான நாளாக அமையும். உங்களை சுற்றி இணக்கமான மற்றும் உற்சாகமூட்டக்கூடிய சூழல் இருக்கும். உங்களுடைய வசீகரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய உண்டு.உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்காதீர்கள். இன்று சிலருடன் சேர்ந்து உழைப்பது அல்லது சமூகப் பணிகளில் ஈடுபடுவது மனமகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் அன்பும், இனக்கமும் அதிகரிக்கும். கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒட்டுமொத்தத்தில் இன்று மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய எதார்த்த குணம் வெளிப்படுவதை காண்பீர்கள். தேவையான நேரத்தில் சரியான விஷயங்களை பேசுவது மட்டும் செயல்களில் ஈடுபடுவீர்கள். இது பணியிடத்திலும் குடும்பத்திலும் தவறான புரிதல்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் உங்களுடைய பேச்சில் பொறுமை மற்றும் தெளிவான அணுகுமுறை அனைத்தையும் உணர்த்தும். இன்று பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இன்று எந்த ஒரு சவாலையும் சமாளிப்பதற்கான வருமான மனநிலையுடன் இருப்பீர்கள். உங்களுடைய நிதிநிலை சற்று ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்.

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன் கிடைக்கக் கூடிய நாள். மனதில் சில வருத்தம் இருக்கும். அதனால் உங்கள் செயல் மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.இன்று எந்த ஒரு சூழலிலும் நல்லிணக்கத்தை பேணுவதில் கவனம் செலுத்தவும். உங்களுடைய மன உறுதியை சோதிக்க கூடிய சில சவால்களை எழலாம். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். வேலை தொடர்பான திட்டமிடல் புத்துணர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். உறவுகளை வலுப்படுத்த, அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடவும் அவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய ஆற்றலை சரியான விதத்தில் பயன்படுத்துவீர்கள். உங்கள் செயல்களில் உற்சாகம் மனநிலை இருக்கும். அதனால் எந்த ஒரு வேலையும் சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். ஒட்டுமொத்தத்தில் மகிழ்ச்சியும் நல்வாழ்வு நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் சுற்றியுள்ளவர்களுடன் ஆழமான உறவு வளரும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகளும், இனிமையான ஆச்சரியங்களும் நிறைந்திருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும்.இன்று உங்கள் வேலை தொடர்பாக பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். அதேசமயம் புதிய வழியில் வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்து செல்லவும். அவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான அனுகூலம் ஏற்படும். விவசாய பணிகளில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சில புதிய மாற்றங்களை செய்ய நினைப்பீர்கள். இன்று நீங்கள் நினைத்த காரியங்களை முடிக்க உங்களுடைய திட்டங்கள் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். பணி நிமித்தமான பயணங்கள் மற்றும் முயற்சிகள் சாதகமான பலன்களை தரும்.

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று வேலை மற்றும் உங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றும் விஷயத்தில் கற்பனை உலகை விட்டு, நிதர்சனமாக சிந்தித்து செயல்படவும். இன்று கல்வி தொடர்பான விஷயங்களை ஆர்வம் குறைவாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் கடினமான வேலைகள் இருந்தாலும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இன்று பூர்விக சொத்து தொடர்பான விவகாரங்களில் லாபம் கிடைக்கும். உங்கள் துணை மற்றும் பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் அலைச்சலை தரக்கூடியதாக இருந்தாலும் ஆதாயம் நிறைந்திருக்கும். உங்களுடைய பழைய நினைவுகள் சற்று சோகமான மனநிலையை தரும். தாய் வழி உறவினர்களிடம் இன்று அனுசரித்து செல்லவும். இன்று உங்களுக்காக நேரம் செலவிடவும், உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு மனதிருப்தியை தரும். காதல் விவகாரங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மனதில் திம்பம், வேலை தொடர்பாக புதுவித நம்பிக்கையும் பிறக்கும். படிப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சரியாக செய்து முடிக்க முடியும். பழைய பிரச்சினைகளுக்கு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று திருமணம் தொடர்பான சில நல்ல தகவல் கிடைக்கும்.

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். உங்கள் வேலை தொழில் தொடர்பான வியூகங்களுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுடைய மதிப்பை உயரும். மேலும் கடினமான சூழலில் உங்களுடைய திறமை வெளிப்படும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான கவலை ஏற்படலாம். அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முயலவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகளை பெறுவீர்கள். இன்று தக ஊழியர்கள் மற்றும் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதால் மன தைரியம் உண்டாகும்.

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் விரும்பிய சில பொருட்களை வாங்கி மகிழுங்கள். பணியிடத்தில் சில பிரச்சனைகளும், உங்கள் மீதான விமர்சனமும் ஏற்பட்டு நீங்கும். உங்களுடைய உணர்வுகள் குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்களுடைய வேலை அல்லது குடும்பத்தினருடன் புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகளை முடிப்பதில் விழிப்புணர்வுடன் செயல்படும். எதிலும் நேர்மையான அணுகுமுறை தேவைப்படும்.

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் தாமதம் அல்லது அலைச்சல் உண்டாகலாம். நீங்கள் வாங்கிய பழைய கடனை குறைக்க முடியும். வண்டி வாகன பயன்பாட்டின் போது பொறுமை தேவைப்படும். இன்று பிறரின் தனிப்பட்ட விவாகரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணிகளை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். உங்கள் பணிகளை முடிக்க நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடைய வியாபாரம் தொடர்பாக சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். சூழல் சாதகமற்றதாக இருக்கும். உங்களுக்கு ஒருவிதமான மனசோர்வு ஏற்படும்.

Bootstrap