காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாகக் குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் பாஸ்கல் கொன்ஃபாப்ரூ (Pascal Confavreux), காசாவிற்குள் மனிதநேய உதவிகள் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மேற்குக் கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சட்டவிரோத மேற்குக் கரை குடியேற்றப் பகுதிகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஐக்கிய இராச்சியம், கனடா உள்ளிட்ட 9 நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ் தடை விதித்துள்ளபோதிலும், "இது போதுமானதல்ல, மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகள் குறித்துப் பேசிய அவர், அது தொடர்பான முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மட்டத்திலேயே எடுக்கப்படுவதாகவும், அதற்கு இதுவரை தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Bootstrap