அமெரிக்காவில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் இரண்டாம் நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை சந்தித்துப் பேசியதுடன் வெள்ளை மாளிகையையும் பார்வையிட்டனர்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரங்களை அவர்கள் ஓரங்கட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான், தைவான், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வர்த்தகம் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு வல்லரசுகளும் பரஸ்பர உரையாடலை வலுப்படுத்த முற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற சந்திப்பை "மிகச் சிறந்த சந்திப்பு" என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
"2016-ல் நான் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் நானும் பரஸ்பர மரியாதை மற்றும் எங்கள் மக்களின் முக்கிய நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மிகச் சிறந்த நட்புறவை வளர்த்துக் கொண்டுள்ளோம்." என்று ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.