ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து? - சட்டப்பேரவையில் பரபரப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்கக் கோரி முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் அவையில் அமளி ஏற்பட்டது.

குறிப்பாக, 2000-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கூடுதல் சுயாட்சி தொடர்பான தீர்மானம் மற்றும் 2024-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தற்போதைய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்தின் நகல்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது தொடர்பாக விவாதம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.

Bootstrap