தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு

தமிழக அரசு மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியாத விரக்தியில் சிலர், தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தன் தாயைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தான் அதைப் பொறுத்துக்கொண்டதாகவும், ஆனால் தன் அக்கா மற்றும் தங்கைகளைப் பற்றிப் பேசினால் இனி தான் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் திட்டவட்டமாக எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap