22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (25) நாடாளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின.
இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த 22ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.