புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவை சாடிய ட்ரம்ப்: கனடா பதிலடி

கனடா, புலம்பெயர்தல் மூலம் தன்னையே அழித்துக்கொள்வதாக ட்ரம்ப் சாடியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கனடாவின் கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள, ட்ரம்ப், கனடா தனது புலம்பெயர்தல் கொள்கைகளால் தன்னையே அழித்துக்கொள்வதாக சாடியுள்ளார்.

அதாவது, சரியான பாதுகாப்புச் சோதனைகள் இல்லாமலே பல மில்லியன் புலம்பெயர்வோரை கனடா அனுமதிப்பதாகவும், அதன் மூலம் தன்னையே அழித்துக்கொள்வதாகவும் விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.

தனது சமூக ஊடகப்பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ள இடுகை ஒன்றில், கனடா அளவுக்கதிகமான மக்களை நாட்டுக்குள் அனுமதிப்பதாகவும், அப்படி கனடாவுக்குள் வருபவர்கள் சரியாக சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள ட்ரம்ப், அதனால் கனடாவுக்கு ஏற்பட உள்ள பிரச்சினை, ஒரு கட்டத்தில் கனடாவால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கைமீறிப்போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது, கனடா 2024இலிருந்து புதுப்பிக்கப்பட்ட புலம்பெயர்தல் கொள்கைகளைப் பின்பற்றுவதாக தெரிவித்த அனிதா ஆனந்த், நாம் வெளிநாட்டுப் பணியாளர்கள் உட்பட நமது புலம்பெயர்தல் அளவை உறுதி செய்துவருகிறோம் என்றும், கனேடியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாட்டுப் பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, கனேடியர்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

அத்துடன், புலம்பெயர்தல் கனடாவை அழிப்பதற்கு பதிலாக, பொருளாதார ரீதியாக கனடாவுக்கு கூடுதல் செழிப்புக்கு வழிவகை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Bootstrap