சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் உயரமான அலைகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அமைந்துள்ள குறித்த கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருவளை முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பகுதிகளில் செயற்படும் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.