கொங்கோ விமான விபத்தில் இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நேற்று (25) இடம்பெற்ற விமான விபத்தில் இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிக்விட்டில் இருந்து தலைநகர் கின்ஷாசாவுக்கு பயணித்த இராணுவ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கெங்கே பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

விபத்தில் இராணுவ நீதிமன்றத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாய் டியெண்டே மற்றும் ஆயுதப் படைகளின் தணிக்கை ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தூதுக்குழுவைச் சேர்ந்த 12 பேர் மற்றும் விமானக் குழுவினரும் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இவ்விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Bootstrap