ட்ரம்ப் – சீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நிறைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சர்வதேச வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் கடந்த 23ஆம் திகதி அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய வர்த்தகப் போர் நிறுத்தம் 2027 ஜனவரி 10ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

Bootstrap