தியாக தீபம் திலீபனின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தலையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் வலியுறுத்தி பிரித்தானியாவில் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் லிவர்பூல், டார்பி சதுக்கம் பகுதியில் நேற்று (25.09) இடம்பெற்றது.
இதன்போது தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை மற்றும் இனவழிப்புக்கு எதிரான பரிகார நீதி மற்றும் திலீபனின் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.
இதில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.