யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனிற்கு அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள் கூட்டம்!

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதன் போது ஈகை சுடரினை மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகிய இரு மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அதேவேளை தியாக தீபம் உண்ணாநோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில் ஈகை சுடரினை மாவீரர்களான செல்லக்கண் மற்றும் இசை செல்வன் ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி , போராளி சுப்பிரமணியம் மலர்விழி ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் நினைவாலயத்தில் உள்ள தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு மாவீரர் அறிவின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Bootstrap