உக்ரைன் இராணுவம் தரை ரோபோக்களை ரஷ்ய போரில் களமிறங்கியதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவின் 3,000 எதிரி வீரர்களைக் குறிவைத்து, தரை ரோபோக்களை களமிறக்கி உக்ரைன் சஃபாரி நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உக்ரைன் இராணுவ ட்ரோன் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ட்ரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யாவின் ஆழத்திற்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்துகிறது.
அந்த வகையில், புதிய சஃபாரி நடவடிக்கையில் ரஷ்ய முன்னணிப் படையின் பின்னால் தரை ரோபோக்களை இறக்க உக்ரைன் குண்டுவீச்சு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தரை ரோபோக்களில் பொருத்தப்பட்டிருந்த கமெராக்கள் இந்த திடீர் நடவடிக்கையைப் பதிவு செய்தன.
இந்த நடவடிக்கையின் விளைவாக 3,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.