யாழில் பணம், கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குழுவொன்றை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று (27) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது, காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் 9 இலட்சம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேரும் கைது செய்யப்பட்டதுடன், குறித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர்கள் இன்று (28) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bootstrap