'இந்தியா வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது' - ரஷ்யா குற்றச்சாட்டு

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்றும் இந்தியாவை கட்டுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்றும் இந்தியாவுக்கான ரஷ்ய தூதுவர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற என்.டி.டி.வி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய அவர், சீனா போன்ற மற்றொரு வல்லரசு நாடாக இந்தியா உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை.

இந்த ஆண்டு நடைபெற்ற ரைசினா மாநாட்டில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர், இந்தியாவை அடுத்த சீனா போன்ற ஒரு போட்டியாளராக உருவாவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறியிருந்தார்.

இந்திய மேலும் வலுப்பெற்று, இறுதியில் ஒரு வல்லரசு நாடாக மாறும்போது, அது முடியாத ஒன்றாக இருக்கும்.

எனவே இந்தியாவை கட்டுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்று கூறியிருந்தார்.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை தனது சொந்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் வாங்குகிறது.

மேலும் இந்தியாவுக்கு மசகு எண்ணெய், ஒரு போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்கிறது.

இந்தியா வளர்ச்சி அடையும்போது, இந்த வகையான அழுத்தங்களும் தந்திரங்களும் தொடர்ந்து தீவிரமடையும் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Bootstrap