சூர்யாவுடன் இணையும் எஸ்.எஸ்.ராஜமௌலி

நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 ஆம் வருடம் எல்லாமே சூப்பராக அமைந்து வருகிறது.

முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. கருப்பு திரைப்படம் 300 கோடி ரூபாவுக்கும் மேலான வசூல் வேட்டை செய்தது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா - மமிதா பைஜு நடித்த விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்படம் வெளியானது, இந்த படமும் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அடுத்த சூர்யா - ஜோதிகாவின் 20 ஆவது வருட திருமண நாளை கொண்டாடும் விதமாக வெளிநாட்டில் கிறிஸ்துவ முறைப்படி குழந்தைகள், குடும்பம் முன் திருமணம் செய்துகொண்டனர்.

அண்மையில் நடிகர் சூர்யா வரும் அக்டோபர் 2 ஆம் திகதி வெளியாக இருக்கும் டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் கலந்துகொள்ள அவரிடம் சூர்யாவுடன் இணையும் படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இந்தக் கேள்வி வரும் என்று எதிர்ப்பார்த்து தான் இங்கே வந்தேன். நாங்கள் இந்தப் படத்தை ப்ரொமோட் செய்வதற்காக இங்கே வந்திருக்கிறோம். நான் என்னை பற்றியும், சூர்யாவை பற்றியும் ஏதாவது பேசினால் அது தலைப்பு செய்தியாகிவிடும்.

மாறாக இந்தப் படம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும். அதற்கு நான் வாய்ப்பு கொடுக்கமாட்டேன். நாங்கள் எப்போது ஒரு படத்தை செய்தாலும் அது எங்களுக்கு ஸ்பெஷலானதாக இருக்கும் என பேசியுள்ளார்.

Bootstrap