ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் பிரதமர் இரகசிய பயணம்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) இரகசிய பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளும் ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பாக அமீரகத் தலைவர் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி குறித்து விவாதிக்கவே அவர் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து இரு நாடுகளின் அதிகாரப்பூர்வ தரப்பில் உடனடியாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Bootstrap