ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் நோக்கில் புறப்பட்ட புலம்பெயர்வோர் மீது பிரான்ஸ் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளார்கள்.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை கொடுத்துள்ளது.
பிரான்ஸ் பொலிசாரும், ஆங்கிலக்கால்வாயில் இறங்க முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.
அவ்வகையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குப் புறப்பட்ட ஒரு கூட்டம் புலம்பெயர்வோரை பிரான்ஸ் பொலிசார் தடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒரு கட்டத்தில், புலம்பெயர்வோர் மீது பிரான்ஸ் பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
கடலுக்குள் இறங்க முயன்ற புலம்பெயர்வோர் மீது பிரான்ஸ் பொலிசார் சரமாரியாக கண்ணீர் புகை குண்டுகளை வீச, அதை எதிர்கொள்ளமுடியாமல், அவர்கள் திரும்பி ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
அத்துடன், புலம்பெயர்வோர் பயணிக்க இருந்த ரப்பர் படகையும் பிரான்ஸ் பொலிசார் கத்தியால் கீறி பயணிக்க இயலாதபடி செய்துள்ளார்கள்.