கனேடிய நகரமொன்றில் சனிக்கிழமையன்று ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை மதியம், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Montérégie என்னுமிடத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைக்கப்பெற்ற பொலிசார் அங்கு விரைய, ஹெலிகொப்டர் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்திருக்கிறது.
உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து தீயை அணைத்த நிலையில், ஹெலிகொப்டரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டுள்ளனர்.
அந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள், ஹெலிகொப்டரை இயக்கிய தொழில்முறை விமானியான சூசேன் ஜூத்ராஸ், ஹெலிகொப்டரில் பயணித்த கேப்ரியல் ஜாஸ்மின், கேப்ரியலின் மாமியாரான சான்றல் ரேமண்ட் (Chantal Raymond) மற்றும் மைத்துனரான லூகாஸ் (Loucas Perreault) என தெரியவந்துள்ளது.
கேப்ரியல், Énergie 106.1 என்னும் தனியார் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கேப்ரியலின் மனைவியான ஓசேயான் (Océane Perreault), தன் தாயின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தன் குடும்பம் ஹெலிகொப்டரில் புறப்பட்ட நிலையில், அந்தப் பயணம், தான் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத ஒரு துயரத்தில் முடிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கேப்ரியலுக்கும் ஓசேயானுக்கும் 2025 கோடையின்போதுதான் ஒரு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.