லொத்தர் சீட்டிலுப்பில் 1 மில்லியன் டொலர் பரிசு!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ட்ரெவர் மற்றும் ஆம்பர் முல்லின்ஸ், கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற 'லொட்டோ 6/49' கோல்ட் போல் குலுக்கலில் 1 மில்லியன் டாலர்களைப் பரிசாக வென்று கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே கிடைத்திருக்கும் என்று நினைத்து, எங்கள் தேனிலவுப் பயணத்திற்குப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் 1 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதை அறிந்ததும் எனது மனைவி ஆம்பர் உணர்ச்சிவசப்பட்டு 4 மணிநேரம் தொடர்ந்து அழுதார் என ட்ரெவர் தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த இத்தம்பதியினர், அந்தச் செய்தியை உடனடியாக நம்ப முடியாமல் மனதை அமைதிப்படுத்த நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

எனது வாழ்நாளில் எனக்கு இருந்த அனைத்து நிதிப் பிரச்சினைகளும் ஒரே நொடியில் மறைந்துவிட்டன என ட்ரெவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

அண்மையில் தங்கள் திருமணத்திற்கான கடன்களை அடைத்து முடித்து, ஓய்வூதியக் காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிய இத்தம்பதியினருக்கு இந்த வெற்றி சரியான நேரத்தில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதியினர் தங்களின் கனவுத் தேனிலவுப் பயணத்தைத் திட்டமிட்டு வருகின்றனர். ட்ரெவர் தனது நீண்ட நாள் கனவு காரான மஞ்சள் நிற 'கார்வெட்' சொகுசுக் காரை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

ஹாலிஃபாக்ஸில் உள்ள 'இங்லிஸ் ஸ்ட்ரீட் சர்க்கிள் கே' வணிக நிலையத்தில் இந்த வெற்றிச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது. வெற்றிச் சீட்டை விற்பனை செய்த இந்தக் கடைக்கு 1 சதவீத போனஸ் தொகை வழங்கப்படும் என 'அட்லாண்டிக் லொட்டரி' நிறுவனம் அறிவித்துள்ளது

Bootstrap