மொரோக்கோ அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் நியமனம்

மொரோக்கோ அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 50 வயதான பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரி  (Fatima Ezzahra El Mansouri) மொரோக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல் மன்சூரி, மராகெஷ் நகரின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் அரசாங்கத்தில் நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அவர் தலைமையிலான PAM கட்சி 395 ஆசனங்களில் 97 ஆசனங்களை வென்று அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாக பதிவாகியுள்ளது.

மொரோக்கோ அரசியலமைப்பின்படி, அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியிலிருந்து அரசாங்கத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் மன்னருக்கு உள்ளது.

இதன்படி, மன்னர் ஆறாம் முகமது, எல் மன்சூரிக்கு புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார்.

எனினும், அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 198 ஆசனங்கள் PAM கட்சியிடம் இல்லாததால், ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Bootstrap