பிரபஞ்சத்தின் புது வரவு - தூசி வளையத்துக்குள் ஒளிந்திருந்த இராட்சத இளம் கோள்!

அண்டவெளியில் 10 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே பழமையான 'எலியாஸ் 2-24 பி' (Elias 2-24b) என்ற இளம் புறக்கோள் ஒன்றை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள், உருவத்தில் வியாழன் கிரகத்தை விடப் பெரியதாகும். நாசாவின் (NASA) புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்தபோதே இந்தக் கண்டுபிடிப்பு வெளியானது.

இந்தக்கோள் 10 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே வயதுடையதால், இது அறிவியல் ரீதியாக 'இளம் கோள்' எனக் கருதப்படுகிறது.

வாயு மற்றும் தூசியால் சூழப்பட்டுள்ள இந்தக்கோள், தனது தாய் நட்சத்திரத்தின் தூசிப்படல வளையத்திற்குள் சுற்றி வருகிறது.

வாயு, பாறை மற்றும் பனித்துண்டுகளுடன் காணப்படும் இக்கோளின் உருவாக்கம், பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் எப்படித் தோன்றியது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மறைந்திருக்கும் இதுபோன்ற மேலும் 7 இளம் கோள்கள் குறித்த ஆய்வுகள் தற்போது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Bootstrap