பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்ட லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், நாய் நடைப்பயிற்சியாளராகப் பணியாற்றி அதிக வருமானம் ஈட்டி வருகிறார்.
லண்டனின் மேற்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த லிஸ் ஈஸ்ட் (30), வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.
இவர் தினமும் 12 மணி நேரத்திற்கும் மேலான வேலைப்பளு மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக அந்த தொழிலில் இருந்து விலகத் தீர்மானித்தார்.
விலங்குகள் மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக, நாய்களுக்கு நடைப்பயிற்சியளிக்கும் தொழிலை முழுநேரமாகத் தொடங்கினார்.
தற்போது தினமும் 20 முதல் 30 நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் இவர், ஒரு நாளைக்குச் சுமார் 400 முதல் 530 டொலர் வரை வருமானம் ஈட்டுகிறார்.
வழக்கறிஞர் பணியில் கிடைத்த வருமானத்தை விட இதில் பாதியளவு நேரத்தில் பல மடங்கு அதிக வருமானமும் மன அமைதியும் கிடைப்பதாகத் தெரிவித்துள்ள லிஸ், பிடிக்காத வேலையில் இருந்து கொண்டு தம்மைத் தாமே வருத்திக்கொள்ளக் கூடாது என்றும் கருத்துப் பகிர்ந்துள்ளார்.