21 செ.மீ உயரமே கொண்ட 'கமாண்டோ' : மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி நாய்க்கு குவியும் பாராட்டு!

மெக்சிகோவின் தேசிய பாதுகாப்புப் படையில் 21 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்ட சிறிய ரக ‘சிஹுவாஹுவா’ (Chihuahua) நாய் ஒன்று அதிகாரப்பூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது.

‘கமாண்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

பொதுவாக பாதுகாப்புப் படைகளின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடோர் போன்ற பெரிய ரக நாய்களே பயன்படுத்தப்படுகின்றன.

எனினும், வழக்கத்திற்கு மாறாக மிகச் சிறிய உருவம் கொண்ட சிஹுவாஹுவா ரக நாயை மெக்சிகோ பாதுகாப்புப் படை மீட்புப் பணிக்காக இணைத்துள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே பெரிய நாய்களால் எளிதில் செல்ல முடியாத குறுகிய பகுதிகளுக்குள் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டிருப்பதால் ‘கமாண்டோ’ இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் மெக்சிகோ பாதுகாப்புப் படையின் புதிய முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Bootstrap