துபாய் விமானப் பயணம் டிசம்பர் வரை ரத்து: SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) துபாய் - சிங்கப்பூர் இருவழி விமானப் பயணத்தை டிசம்பர் முதலாம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கில் அரசியல் பதற்றம் நீடிப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியது.

சிங்கப்பூரிலிருந்து துபாய் செல்லும் SQ494, துபாயிலிருந்து சிங்கப்பூர் வரும் SQ495 ஆகிய இரு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலைமை தொடர்ந்து மாறுவதால் நிறுவனத்தின் மற்ற விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று அது சொன்னது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படாத விமானச் சீட்டுக்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கான விமானச் சேவையை டிசம்பர் 2ஆம் தேதிவரை ரத்து செய்வதாக Scoot நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சிங்கப்பூரிலிருந்து ஜித்தா செல்லும் TR796, ஜித்தாவிலிருந்து சிங்கப்பூர் வரும் TR797 ஆகிய விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பயணத்தைத் தொடர விரும்பாத பாதிக்கப்பட்ட பயணிகள் முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

 

Bootstrap