பராமரிப்பு நிலையத்திற்குத் துப்பாக்கியை எடுத்துச் சென்ற சிறு பிள்ளை

பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கியை வெளியே எடுத்த சிறு பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பிள்ளை தனது பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்தது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நிலைய ஊழியர்கள் உடனடியாக பிள்ளைகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ததாகக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

அந்தத் துப்பாக்கியில் தோட்டாக்களும் இருந்தன.

அந்தச் சிறு பிள்ளையின் பெற்றோரில் மற்றொருவர் காவல்துறை அதிகாரி.நிலையத்தில் இருந்த துப்பாக்கி காவல்துறையைச் சேர்ந்தது அல்ல.

சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாருக்கும் தீய நோக்கம் ஏதும் இல்லை என்று நம்புவதாகக் காவல்துறை தலைவர் கூறினார்.

துப்பாக்கியைப் பாதுகாப்பாக வைப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

நிலையத்தில் ஏற்கனவே நிறையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன.

அவை மேலும் மெருகேற்றப்படவுள்ளன. பிள்ளைகளின் பைகள் அனைத்தும் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Bootstrap