ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள நாடுகளில் டீசல் லீட்டர் ஒன்றின் விலை சராசரி விலையை விட வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2.24 யூரோக்களாக (சுமார் 2.53 அமெரிக்க டொலர்கள்) விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ப் பதற்றங்களைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக, ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்களும் கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.