கனடாவில் தமிழ் நகைக்கடை மீது துப்பாக்கி சூடு

கனடாவில் தமிழருக்கு சொந்தமான நகையகம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி நகைக்கடையை குறிவைத்து நேற்று அதிகாலை வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் தாக்கி, சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் கடையில் எந்தவொரு பணியாளரும் அங்கு இருக்கவில்லை. இதன் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

தாக்குதல் நடத்தவர்களை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap