ஓமான் கடற்பரப்பிற்கு அருகே, 2.5 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பிரமாண்ட கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் தீப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமான் கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியே, அனுமதிக்கப்படாத பாதையில் இந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.