சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 77ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஹாங்காங்கின் புகழ்பெற்ற விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்டமான தேசிய தின வானவேடிக்கை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 23 நிமிடங்கள் நீடித்த இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிநவீன வானவேடிக்கைப் பொருட்கள் விண்ணில் செலுத்தப்பட்டன .
இவை துறைமுகத்தின் இரு கரைகளையும், வானத்தையும் பல்வேறு வண்ணங்களால் அலங்கரித்துள்ளன.
இந்தக் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியைக் நேரில் கண்டுகளிப்பதற்காக, சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளூர் மக்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் விக்டோரியா துறைமுகப் பகுதியில் திரண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.