இராணுவ விதியை மீறிய பிரபல கே-பாப் கலைஞர்: சியோல் நீதிமன்றம் அளித்த அதிரடித் தீர்ப்பு!

தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென் கொரியச் சட்டப்படி, குறிப்பிட்ட வயதுடைய ஆண்கள் அனைவரும் கட்டாயமாக இராணுவ சேவை ஆற்றுவது அவசியமாகும்.

இந்த நிலையில், இராணுவப் பணியில் ஈடுப்பட்டிருந்த MINO, எந்த வித உரிய தகவலும் இன்றி தொடர்ந்து 102 நாட்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் இருந்துள்ளார்.

இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலேயே அவருக்கு இந்த ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வழக்கு விசாரணையின் போது, தான் மீண்டும் இராணுவச் சேவையைத் தொடர்ந்து நிறைவுசெய்ய விரும்புவதாக MINO நீதிமன்றத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனைத் பரிசீலித்த சியோல் நீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து (Suspended Sentence) உத்தரவிட்டுள்ளது.

பிரபல K-pop கலைஞர் ஒருவர் கட்டாய இராணுவ சேவையின் போது பணிக்கு வராததால் சிறைத்தண்டனை பெற்றுள்ள சம்பவம் K-pop ரசிகர்கள் மத்தியிலும் சர்வதேச ஊடகங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap