இலட்சங்களை அள்ளிக் கொடுத்து 'காதல்' அனுபவம் - இந்த புது ட்ரெண்ட் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

சீனாவில் இளம் பெண்கள் மத்தியில் ஆண் அழகர்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி, காதலர்களைப் போன்ற நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்துக்கொள்ளும் புதிய சேவை பிரபலமடைந்து வருகிறது.

இந்தச் சேவையை வழங்கும் பிரத்தியேக ஸ்டுடியோக்கள் மற்றும் உணவகங்களில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஆண் அழகர்களின் தோற்றம், உயரம் மற்றும் பிரபலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு Catalogue மூலமாகத் தெரிவு செய்ய முடியும்.

கை கோர்த்து நடப்பது, அன்பைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல்வேறு கருப்பொருள்களில் இவர்கள் நிழற்படங்களை எடுத்துக்கொள்கின்றனர்.

இதற்காக குறித்த ஆண் அழகர்களின் பிரபலத்தைப் பொறுத்து ஒரு மணித்தியாலத்திற்கு அதிகபட்சமாக 8,000 யுவான் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தனிமை, குடும்பத்தினரின் திருமண அழுத்தம் மற்றும் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வர விரும்பும் பெண்களே இந்தச் சேவையை அதிகம் நாடுவதாகக் கூறப்படுகிறது.

நிஜ வாழ்க்கை உறவுகள் இன்றி, தற்காலிக உணர்வுபூர்வ ஆறுதலுக்காகப் பணம் செலவிடும் இந்த உணர்வுபூர்வ நுகர்வு கலாசாரம் தற்போதைய சமூக மாற்றத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது.

Bootstrap